சுடச்சுட

  

  வால்பாறையில் 97 மி.மீ. மழை: ஆறுகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம்

  By DIN  |   Published on : 15th June 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  valpari

  சோலையாறு எஸ்டேட், பிர்லா அருவியில் இருந்து பெருக்கெடுத்து தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே பாயும் வெள்ளம்.

  வால்பாறை நகர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவுடன், மரங்கள் விழுந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வால்பாறை நகரப் பகுதிகளில் உள்ள சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
  புதன்கிழமை காலை முதல் மழை குறைந்து காணப்பட்டது. இருப்பினும், வியாழக்கிழமை அதிகாலை, வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீ.):
  வால்பாறை- 97, நீராறு அணை- 126, சின்னக் கல்லாறு- 114, சோலையாறு அணை- 124. சோலையாறு அணைக்கு 4246.53 கனஅடி நீர்வரத்து இருந்தது. 160 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 122.80 அடியாக உள்ளது.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai