Enable Javscript for better performance
கம்பம் பகுதியில் பெய்து வரும் மழை; வேகமாக நிரம்பி வரும் குளங்கள்- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் பகுதியில் பெய்து வரும் மழை; வேகமாக நிரம்பி வரும் குளங்கள்

    By DNS  |   Published on : 16th June 2018 05:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rain


    கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    தேனி மாவட்டம் கம்பம் நகரின் கிழக்கு பகுதியில் வீரப்பநாயக்கன்குளம், ஒட்டுகுளம், உடப்படிகுளம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த குளங்களுக்கு நீர்வரத்து முல்லைப் பெரியாறிலிருந்து பெறப்படுகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் தாக்கம் கூடலூர், கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தெரிகிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை.

    அதே நேரத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றறப்படுகிறறது. இதன் மூலம் கம்பம் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வீரப்பநாயக்கன் குளத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai