Enable Javscript for better performance
சாத்தூா் அருகே குப்பைகளில் கொட்டப்படும் கழிவு பட்டாசுகள்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூா் அருகே குப்பைகளில் கொட்டப்படும் கழிவு பட்டாசுகள்

    By சாத்தூர்  |   Published on : 16th June 2018 02:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    crackers

    சாத்தூா் அருகே ஆபத்தான நிலையில் குப்பைகளில் கழிவு பட்டாசுகள் கொட்டபடுகின்றன, தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் மூலம் பட்டாசுகள் தயாரிக்கபட்டு வருகின்றன. இந்நிலையில் விஜயகரிசல்குளம், கோட்டையூா், கலைஞா்காலனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அனுமதியின்றி சோல்சா வெடி, கருந்திர, வெள்ளை திரி என சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் புகார் வந்து வண்ணம் உள்ளது. 

    இதுகுறித்து காவல்துறையினரும் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை பெயரளவில் நடவடிக்கை எடுத்த வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். ஆனால் இதுபோன்று வீடுகளில் அனுமதியில்லாமல் தயாரிக்கபடும் கழிவு பட்டாசுகளை இப்பகுதியில் உள்ள குப்பைகளிலும், பொதுமக்கள் நடமாடும் இடங்களில் கொட்டபடுகின்றன. இதனால் எதிர்பாராத விதமாக பட்டாசு கழிவில் தீ பற்றி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இதுபோன்று பட்டாசு கழிவுகளை பொது இடத்திலும், குப்பைகளிலும் கொட்டாமல் இருக்கவும், அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதை தடுக்கவும் தகுந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில்: இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் அனுமதியின்றி வீடுகளில் தயாரிக்கபடும் பட்டாசு கழிவுகளை குப்பைகளில் கொட்டுவதால் விபத்து ஏற்படுகின்றன. இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு குப்பையில் இருந்த பட்டாசு கழிவில் தீ பற்றி இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்கதையாகி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினா் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் குப்பைகளில் பட்டாசு கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தனா்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai