Enable Javscript for better performance
தி.நகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம்: பணிகளை ஆய்வு செய்தார் ஹர்மந்தர் சிங்- Dinamani

சுடச்சுட

    

    தி.நகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம்: பணிகளை ஆய்வு செய்தார் ஹர்மந்தர் சிங்

    By பாவேந்தன்  |   Published on : 16th June 2018 05:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    TNAGARCROWD

     

    சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தி.நகரில் சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட தியாகராய நகரின் தணிகாசலம் சாலையில் பல அடுக்கு வாகன நிறுத்தம், எல்.இ.டி விளக்குகள், தியாகராயர் சாலையில் பாதசாரிகள் நடைபாதை, பூங்காக்கள் மறுசீரமைப்பு, மழைநீர் வடிகால்களை மேம்படுத்துதல், பள்ளிகளில் வகுப்பறைற அமைக்கும் பணிகள் ரூ. 1,366 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி, லோடிகான் தெரு, ராமன் தெருக்களில் நடைபாதை அமைக்கும் பணிகள், ஜி.என். செட்டி சாலையில் உள்ள ஜீவா பூங்கா மறுசீரமைப்புப் பணி ஆகிய பணிகளை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai