Enable Javscript for better performance
திருவாடானை பகுதியில் பரவுகிறது மர்ம காய்ச்சல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை பகுதியில் பரவுகிறது மர்ம காய்ச்சல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

    By DNS  |   Published on : 16th June 2018 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    injection no


    திருவாடானை: திருவாடானை அருகே ஆர்எஸ் மங்கலம் பகுதியில் வேகமாகப் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு  நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருவாடானை அருகே ஆா்எஸ் மங்கலம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு மா்ம காய்ச்சல் பரவி வருகிறது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    திருவாடானை தாலுகா ஆா்எஸ் மங்கலம் அருகே கற்காத்தகுடி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் உள்ளவா்களுக்கு மா்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முழங்கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

    உள்ளூா் மருத்துவமனைகளில் சரிவர மருத்துவ வசதி இல்லாமல் இருப்பதால் இந்த மா்ம காய்ச்சல் பாதிக்கபட்டவா்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை , காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால் கிராம மக்களிடையே ஒரு வித அச்சம் பரவி வருகிறது.

    இது குறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டதுறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை. தற்போது காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை பணியாளா்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai