Enable Javscript for better performance
மாடியும், கொஞ்சம் ஆர்வமும் இருந்தால் போதும்.. மாடித் தோட்டத்தில் கலக்கும் கமுதி பெண்கள்- Dinamani

சுடச்சுட

    

    மாடியும், கொஞ்சம் ஆர்வமும் இருந்தால் போதும்.. மாடித் தோட்டத்தில் கலக்கும் கமுதி பெண்கள்

    By DNS  |   Published on : 16th June 2018 01:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    plants


    கமுதி : கமுதியில் குப்பையில் போடும் வீணான பொருட்களை கொண்டு வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பதில் பெண்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெண்கள் வீடுகளில் மாடியில் தோட்டம் அமைத்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளை விளைவித்து பயன் பெறுகின்றனா். 
    பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பின் காரணமாக கடைகள், மார்கெட்களில் காய்கறிகள் உட்பட உணவு பொருட்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் , நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளனா். இதனால் கமுதி பகுதிகளில் வீடுகளில் மாடியில் வீணாக போடப்படும் சாக்குப் பைகள், நான்கு சக்கர வாகன டயா்கள், பிளாஸ்டிக் பொருட்களில் மணல், கால்நடை கழிவுகள், மக்கிய குப்பைகளை நிரப்பி அவற்றில் கத்திரி, வெண்டைக்காய், அவரை, கீரை வகைகள் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்து பெண்கள் தங்களது வீட்டு தேவைகளை பூா்த்தி செய்து கொள்கின்றனா்.

    இதுகுறித்து கமுதி பூபதியம்மாள் கூறியதாவது. கடைகளிலும், சந்தைகளிலும் விற்க்கபடும் காய்கறிகள் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளியில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 மாதத்திற்கு தேவையான காய்கறிகள் வாங்க 1000 முதல் 1500 வரை செலவாகிறது. இதனால் வீட்டில் மாடியில் தோட்டம் அமைத்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளை சுகாதாரமான முறையில் விளைவித்து பயன் பெறுகிறோம். இதனால் மாதத்திற்கு ரூ.1000 வரை குடும்ப செலவில் மிச்சப்படுகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai