Enable Javscript for better performance
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு: அமைச்சர் ஜெயக்குமார- Dinamani

சுடச்சுட

    

    ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு: அமைச்சர் ஜெயக்குமார்

    By DIN  |   Published on : 16th June 2018 01:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Jayakumar_Mar16

    ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
    அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு; அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து வெற்றி காண்போம். 

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வேதனையை அரசு உணர்ந்துள்ளது.தமிழகத்தில் வருங்காலத்தில் நிலத்தடி நீர் குறையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலைச் சந்திப்போம் என தங்கதமிழ்ச்செல்வன் கூறியது குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போன்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai