Enable Javscript for better performance
அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள அதிமுக சார்பில் கையேடு- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள அதிமுக சார்பில் கையேடு

    By சென்னை,  |   Published on : 24th March 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "நீட்' தேர்வு உள்பட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் இலவச கையேடு அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
    இந்தக் கையேட்டை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வெளியிட, மாணவ-மாணவியரின் பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
    இதற்கான நிகழ்ச்சி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
    தமிழக மாணவ-மாணவிகளின் ஐ.ஐ.டி. கனவுகளுக்கு கைகொடுக்கும் வகையில் இந்தியாவின் தலைசிறந்த பேராசிரியர்களுடன் இணைந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
    பொருளாதார ரீதியாகவும், வசிப்பிட ரீதியாகவும் நேரில் சென்று பயிற்சி பெற இயலாத மாணவ-மாணவியர் இந்த விடியோக்களைப் பார்த்து பயிற்சி பெறலாம். அதிமுக
    தகவல் தொழில்நுட்புப் பிரிவின் அம்மா கல்வியகம் சார்பில் இந்த விடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. 
    இதனை கல்வியகத்தின் இணையதளத்தின் (www.ammakalviyagam.in) வழியாகப் பார்வையிடலாம் என அதிமுக அறிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai