Enable Javscript for better performance
அனைத்துக் கட்சிக் கூட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அனைத்துக் கட்சிக் கூட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    By  சென்னை  |   Published on : 24th March 2018 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    high_court1

    தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சிகள் எதன் அடிப்படையில் கூட்டத்துக்கு அழைக்கப்படுகின்றனஎன்பது குறித்து தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     இதுதொடர்பாக, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் செயலாளர் வி.விஜயகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கடந்த மாதம் 22 -ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழக முற்போக்கு மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத பல கட்சிகளுக்கும், மதத்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைக்கும் வகையில் விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என அதில் கோரப்பட்டிருந்தது.
     இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவுக்கு 4 வார காலத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai