Enable Javscript for better performance
அரசுக்கு ஏற்பட்ட சோதனைகள் சாதாரணமல்ல! பேரவைத் தலைவர் தனபால்- Dinamani

சுடச்சுட

    

    அரசுக்கு ஏற்பட்ட சோதனைகள் சாதாரணமல்ல! பேரவைத் தலைவர் தனபால்

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கடந்த ஓராண்டில் ஏற்பட்ட சோதனைகள் சாதாரணமானவை இல்லை என்று பேரவைத் தலைவர் பி.தனபால் பேசினார்.
     சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஓராண்டு சாதனை விழாவுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமை வகித்தார். விழாவில் அவர் பேசியது:-
     தமிழக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. நூற்றாண்டு விழாவில் நாட்டு மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளது.
     அரசுக்குப் பாராட்டு: அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வெற்றிநடை போடுகிறது. அதற்குக் காரணம், இந்த அரசின் துணிச்சலான நடவடிக்கையாகும். இந்த அரசின் சாதனைகள் தொடர வேண்டும். இந்த ஓராண்டு காலத்தில், பழனிசாமி தலைமையிலான அரசு எத்தனை சாதனைகளைப் படைத்திருந்தாலும், அரசுக்கு ஏற்பட்ட சோதனைகள் சாதாரணமானவை அல்ல. அந்தச் சோதனைகளை எல்லாம் கடந்து வெற்றி நடைபோட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. முதல்வருக்கு வந்த சோதனைகளை அவர் கையாண்ட விதம், அவற்றை எல்லாம் எதிர்நீச்சல் போட்டு செயல்படும் விதம் பாராட்டுக்குரியது என்றார் பேரவைத் தலைவர் தனபால்.
     செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும்போது, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசு ஓராண்டு மட்டுமல்ல, நூறாண்டுகள் தனது சாதனையைத் தொடரும்' என்றார்.
     32 துறைகளின் கண்காட்சிகள்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த அரங்கத்தின் வளாகத்தில் 32 அரசுத் துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
     தானியங்களைக் கொண்டு கோட்டை முகப்பு: ஒவ்வொரு காட்சி அரங்கிலும் தமிழக அரசுத் துறைகளின் திட்டங்கள், செயல்பாடுகள் படக்காட்சிகள் மூலமாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தோட்டக்கலைத் துறை சார்பில், தானியங்களைக் கொண்டு தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையின் முகப்பை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர். வனத் துறை, இந்து சமய அறநிலையங்கள் துறை என ஒவ்வொரு துறையும் தங்களது செயல்பாடுகளை வித்தியாசமான செயல் விளக்கங்கள் வழியாக காட்சிப்படுத்தியுள்ளன.
     சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் காட்சி அரங்குகள் ஒரு வாரத்துக்கு தொடர்ந்து இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai