Enable Javscript for better performance
"அரசு மருத்துவமனைகளில் தனியாரை ஈடுபடுத்தும் திட்டம் இல்லை'- Dinamani

சுடச்சுட

    

     "அரசு மருத்துவமனைகளில் தனியாரை ஈடுபடுத்தும் திட்டம் இல்லை'

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு மருத்துவமனைகளில் தனியாரை ஈடுபடுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுப்ரியா பட்டேல் தெரிவித்துள்ளார்.
     "அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில துறைகளில் தனியாரை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? அவ்வாறு திட்டம் இருந்தால் இந்த முடிவின் காரணம் என்ன? ' என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
     இதற்கு மத்திய இணையமைச்சர் அனுப்ரியா பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,, "மாநிலங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் மத்திய அரசால் நிர்வகிப்படுவதில்லை.
     அதே வேளையில் தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனை, டாக்டர் ஆர்.எம்.எல்.லேடி ஹெர்டிங் மருத்துவக் கல்லூரி, அசோசியேட்டட் மருத்துவமனை ஆகிய மத்திய அரசின் மருத்துவமனைகளில் தனியாரை ஈடுபடுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai