Enable Javscript for better performance
ஆன்லைனில் நாய் விற்பனை செய்வதாகக் கூறி செவிலியரிடம் ரூ. 1.27 லட்சம் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    ஆன்லைனில் நாய் விற்பனை செய்வதாகக் கூறி செவிலியரிடம் ரூ. 1.27 லட்சம் மோசடி

    By  புதுச்சேரி  |   Published on : 24th March 2018 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆன்லைனில் வெளிநாட்டு நாய் விற்பனை செய்வதாகக் கூறி, செவிலியரிடம் ரூ. 1.27 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
     புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தேவி பிரியா (25). செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், உயர்ரக வெளிநாட்டு நாய் விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் பார்த்துள்ளார். ஆன்லைன் மூலமாக நாய் ஒன்றை வாங்க முடிவு செய்து, அதற்கான முகவரியைத் தொடர்பு கொண்டார். அதில், நாயின் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேவிப்ரியா வங்கிக் கணக்கில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி ரூ. 1.27 லட்சத்தைச் செலுத்தியுள்ளார். 15 நாள்களில் நாய் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பணம் செலுத்தி பல நாள்களாகியும் நாய் வந்து சேரவில்லை. இதனால், சந்தேகமடைந்த தேவிப்ரியா பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai