Enable Javscript for better performance
இலவச சைக்கிள் ஒப்பந்தப்புள்ளி: நிறுவன மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    இலவச சைக்கிள் ஒப்பந்தப்புள்ளி: நிறுவன மனு தள்ளுபடி

    By  சென்னை  |   Published on : 24th March 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலவச சைக்கிள் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளைத் தளர்த்தி தங்களது விண்ணப்பத்தை ஏற்க கோரி ஹீரோ சைக்கிள் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
     இதுதொடர்பாக, இந்த நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தன் கீழ் 6 லட்சம் சைக்கிள்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அண்மையில் கோரப்பட்டது.
     அரசின் வரையறைப்படி இலவச சைக்கிள்களில் ஒலி எழுப்புவதற்கான மணி இடம்பெறவில்லை; தமிழக அரசின் முத்திரை இடம்பெறாத காரணத்தால் எங்களது நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விதிமுறைகளைத் தளர்த்தி எங்களது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர்.
     இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "இதுபோன்று ஒரு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை அனுமதித்து ஏற்றுக்கொண்டால், அது ஒரு தரப்பினருக்குச் சாதகமாகிவிடும். அது ஒப்பந்தப்புள்ளியில் பாரபட்சம் காட்டும் விதமாக அமைந்துவிடும். எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது' .
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai