Enable Javscript for better performance
ஈரோடு மாநாட்டில் கருணாநிதி பங்கேற்க மாட்டார்- Dinamani

சுடச்சுட

    
    stalin

    ஈரோட்டில் நடைபெறும் திமுகவின் மண்டல மாநாட்டில் கருணாநிதி பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று அக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
     ஈரோடு மாநாட்டுக்குச் செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: திமுகவின் ஈரோடு மண்டல மாநாட்டில் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். மண்டல மாநாடு என அறிவிக்கப்பட்டாலும், மாநில மாநாட்டை விஞ்சும் அளவுக்கு இந்த மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை.
     திமுக தொடர்ந்த வழக்கு காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளது. இதனால், மத்திய அரசின் ரூ.1,950 கோடி நிதியைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். நியாயமாக அவர் மீது அவதூறு வழக்கு போட வேண்டும்.
     தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவே கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை அறிவித்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அவர் திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்தில் அமைக்க வேண்டுமென்று தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
     காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது மார்ச் 29-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நிச்சயம் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதால் மக்களை அரசு ஏமாற்றி வருகிறது. மக்கள் பிரச்னை பற்றி அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை என்றார் ஸ்டாலின்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai