Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் நிதி இழப்பு: ராமதாஸ் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் நிதி இழப்பு: ராமதாஸ் கண்டனம்

    By  சென்னை  |   Published on : 24th March 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்காததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
     இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
     தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 -18 -ஆம் ஆண்டில் ரூ.3,340 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு 14 -ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு ரூ.1,390 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
     மத்திய அரசின் நிதி கிடைக்காததால் தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய ரூ.60 கோடி கிடைக்காததால் 500 துப்புரவுப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
     தொகுதி மறுவரையறை செய்து முடித்த பிறகுதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொண்டு, ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் அடிப்படையில் தேர்தலை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியும், தோல்வி பயம் காரணமாக தேர்தலை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை.
     ஆட்சியாளர்கள் செய்த தவறுக்கு உள்ளாட்சி அமைப்புகளையும், மக்களையும் தண்டிப்பது முறையல்ல. எனவே உள்ளாட்சித் தேர்தலை அடுத்த 3 மாதங்களில் நடத்துவதாக மத்திய அரசுக்கு உத்தரவாதம் அளித்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மீதமுள்ள ரூ.1,950 கோடி நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai