Enable Javscript for better performance
கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர்கள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர்கள் நியமனம்

    By    சென்னை,  |   Published on : 24th March 2018 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் கூடுதல் இயக்குநர்களை நியமித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
     இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்தார்.
     கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் கூடுதல் இயக்குநர் நிலையில் இருந்து அதற்கு கீழேயுள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வுகள் கடந்த பல மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான (2017-18) பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு 9 பேருக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
     அதன்படி, அந்தத் துறையில் இணை இயக்குநர்களாக இருந்த இ.நளினி, எஸ்.ரேவதி, டி.கணேசன், வி.எஸ்.அன்பரசு, எஸ்.அரசு, ஆர்.மோகனா, வி.சத்தியா, எஸ்.திருஞானசம்பந்தம், எஸ்.கிருபாகரன் ஆகியோருக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று நிதித் துறை கூடுதல் செயலாளர் க.சண்முகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai