Enable Javscript for better performance
காவிரி வாரியம் தொடர்பாக சித்தராமையாவிடம் ஸ்டாலின் லியுறுத்தலாமே? பொன். ராதாகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி வாரியம் தொடர்பாக சித்தராமையாவிடம் ஸ்டாலின் வலியுறுத்தலாமே? பொன். ராதாகிருஷ்ணன்

    By DIN  |   Published on : 24th March 2018 05:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ponnar2


    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க வேண்டும்.

    அந்த சந்திப்பின்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஏன் தண்ணீர் தர மறுக்கிறீர்கள் என்று இருவரும் கேட்க வேண்டும். தமிழகத்தில் இருந்து கொண்டு காவிரிக்காக குரல் கொடுக்கும் இருவரும், இதை ஏன் செய்யவில்லை. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai