Enable Javscript for better performance
குரங்கணி தீ விபத்து: மேலும் இரு பெண்கள் சாவு; பலி எண்ணிக்கை 20 -ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    குரங்கணி தீ விபத்து: மேலும் இரு பெண்கள் சாவு; பலி எண்ணிக்கை 20 -ஆக உயர்வு

    By  மதுரை,  |   Published on : 24th March 2018 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fire

    தேனி மாவட்டம், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி, மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு பெண்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து இத்தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
     கடந்த மார்ச் 11 -ஆம் தேதி குரங்கணியில் மலையேற்றத்துக்கு சென்றவர்கள் அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் இறந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் எம்.கே.சாலையைச் சேர்ந்த சாய் வசுமதி (26), மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நிவ்ய நிக்ருதி (24) ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
     இருவருக்கு தீவிர சிகிச்சை: இந்த நிலையில், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கரி (25) மதுரை அரசு மருத்துவமனையிலும், கேரளாவைச் சேர்ந்த மினா ஜார்ஜ் (32) கேகே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த சுவேதாவை அவரது பெற்றோர் சென்னைக்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai