Enable Javscript for better performance
"கூடுதலாக 40 மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக 40 மணல் குவாரிகளைத் திறக்க வேண்டுமென தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.யுவராஜ் தெரிவித்தார்.
     இதுதொடர்பாக அவர், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறும்போது, "தமிழகத்தில் தற்போது 4 மணல் குவாரிகள் மட்டுமே இயங்குகின்றன.
     இதன்மூலம் தினமும் சுமார் 1,500 லாரிகளுக்கு மட்டுமே மணல் கிடைக்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக 40 குவாரிகளைத் திறந்து தினமும் 30,000 லோடு வரை மணல் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai