Enable Javscript for better performance
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய அசல் பாடலை முழுமையாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாகப் பாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
     சென்னை உயர் நீதிமன்றத்தில் புளியந்தோப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராமபூபதி தாக்கல் செய்த மனுவில், மனோன்மணீயம் சுந்தரனர் எழுதிய அசல் பாடலின் பல பகுதிகள் நீக்கப்பட்டு, ஒரு சில பகுதிகளைக் கொண்டே தற்போதைய நீராருங் கடலுடத்த என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பாடப்பட்டு வருகிறது. இந்த அசல் பாடல் கடந்த 1968-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
     இந்த நிலையில் அசல் பாடலைப் பாடாமல் அதை திருத்துவது அல்லது மாற்றி அமைப்பது அதை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி தமிழ்மொழியின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் அதன் கலாசாரத்துக்கு எதிரானது. எனவே மனோன்மணியம் சுந்தரனர் எழுதிய அசல் பாடலை முழுமையாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக பாட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
     இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த 50 ஆண்டுகளாக பாடப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழத்துப் பாடலை அனைவரும் ஏற்றுக் கொண்டு, மரியாதையுடன் மதித்துப் போற்றி வருகின்றனர்.
     இந்த நிலையில் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்பது சாத்தியமற்றது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai