Enable Javscript for better performance
திரைப்படத் துறையினர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தனி அமைப்பு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    திரைப்படத் துறையினர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தனி அமைப்பு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரைப்படத் துறையினர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
     இது தொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் கடந்த சில நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.அதன் விளைவாக தமிழ் திரைப்படத் துறையில் நேரடியாகப் பணியாற்றும் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல மறைமுகமாக சில லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
     மத்திய அரசு திணித்துள்ள ஜி.எஸ்.டி. 25 சதவீதம் உள்ளபோது, 8 சதவீத கேளிக்கை வரி வசூலிப்பது தங்களுக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக போராடும் அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள். பக்கத்து மாநிலமான கேரளத்தில் ஜி.எஸ்.டி. வரி என்ற வரி மட்டுமே திரைத்துறை வழியாக வசூலிக்கப்படுவதையும், கேளிக்கை வரி தவிர்க்கப்பட்டிருப்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
     மேலும், கந்துவட்டிக் கடனால் தமிழ்த் திரைப்பட உலகம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் போன்ற அமைப்பை அரசு உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai