Enable Javscript for better performance
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம் அகற்றம்

    By  மாதவரம்,  |   Published on : 24th March 2018 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்குன்றம் அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     செங்குன்றம், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த சம்பத் செங்குன்றம் - ஆவடி நெடுஞ்சாலை ஒரு திருமண மண்டபத்தையும் கட்டினார்.
     திருமண மண்டபம் உள்ள இடம் தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. எனவே, அந்த இடத்தை ஆய்வு செய்து மண்டபத்தை இடித்து இடத்தை மீட்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
     இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்நிலையில் திருமண மண்டபம் கட்டிய இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், பொன்னேரி உதவி ஆட்சியர் சுந்தரமூர்த்தி, வட்டாட்சியர் சுமதி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மதியழகன், உதவி பொறியாளர் கனகராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு திருமண மண்டபம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. இதனை முன்னிட்டு, பொன்னேரி போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai