Enable Javscript for better performance
பாதுகாப்பு ஒத்திகை: தலைமைக் காவலர் மாரடைப்பால் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாப்பு ஒத்திகை: தலைமைக் காவலர் மாரடைப்பால் சாவு

    By    பொன்னேரி,  |   Published on : 24th March 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழவேற்காடு அருகே கடலோரப் பாதுகாப்பு ஒத்திகைப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.
     பழவேற்காடு பகுதியில் "சாகர் கவாச்' எனும் பெயரில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை முகாம் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் நடைபெற்று வருகிறது.
     மப்பேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த கோபியும் (50) ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனிருந்த காவலர்கள் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள், கோபி இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai