Enable Javscript for better performance
பாம்பன் தூக்கு ரயில் பாலத்தை கடந்த விசைப் படகுகள்- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் தூக்கு ரயில் பாலத்தை கடந்த விசைப் படகுகள்

    By  ராமேசுவரம்,  |   Published on : 24th March 2018 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rms

    பாம்பன் தூக்கு ரயில் பாலத்தை வெள்ளிக்கிழமை 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்து, மண்டபம் துறைமுகத்துக்குச் சென்றன.
     ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்துக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
     அதையடுத்து, வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடலில் சகஜ நிலை ஏற்பட்டதை அடுத்து, மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு, போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால், ஒவ்வொரு படகுக்கும் பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
     எனவே, மீனவர்கள் தங்களது விசைப் படகுகளில் மீண்டும் மண்டபம் வடக்கு துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை திரும்பினர். அப்போது, பாம்பன் தூக்கு ரயில் பாலத்தை 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் வரிசையாகக் கடந்து சென்றன.
     இக்காட்சியை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கண்டு ரசித்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai