Enable Javscript for better performance
பார் கவுன்சில் தேர்தல்: ஆதார் பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    பார் கவுன்சில் தேர்தல்: ஆதார் பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி

    By  மதுரை,  |   Published on : 24th March 2018 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பார் கவுன்சில் தேர்தலில் ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகிய புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணங்களைக் காண்பித்தும் வழக்குரைஞர்கள் வாக்களிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
     அடையாள அட்டை காலாவதியானவர்கள் வாக்களிக்க முடியாது என்ற தேர்தல் அலுவலரின் அறிவிப்பை ரத்து செய்ய வழக்குரைஞர் பாலகார்த்திக் மனு தாக்கல் செய்திருந்தார்.
     இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. பார் கவுன்சில் தேர்தலில் வழக்குரைஞர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பார் கவுன்சிலில் பதிவு செய்த சான்றுகளை காண்பித்தும் வாக்களிக்கலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai