Enable Javscript for better performance
பாறைக்குழி நீரில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் அருகே பாறைக்குழி நீரில் குளிக்கச் சென்ற தனியார் பள்ளி மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
     திருப்பூர், மங்கலம் அருகிலுள்ள பாரதிபுரம், கோட்டை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் சுதர்ஸன் (16). இவர், திருப்பூர், இடுவம்பாளையத்தில் உள்ள பள்ளியில் 11 -ஆம் வகுப்புப் படித்து வந்தார். அதே பள்ளியில், பல்லடம், அறிவொளி நகரைச் சேர்ந்த எஸ்.அமீர்கான் (16), மங்கலம் அருகிலுள்ள அண்ணாமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த டி.மனோகரன் (16) ஆகியோரும் 11-ஆம் வகுப்புப் படித்து வந்தனர். வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் மாணவர்கள் மூவரும் சக மாணவர்கள் 4 பேருடன் சேர்ந்து மங்கலம் அருகே இலந்தைக் குட்டைப் பகுதியில் உள்ள பாறைக்குழி நீரில் குளிக்கச் சென்றுள்ளனர்.
     பாறைக் குழித் தண்ணீரில் 6 மாணவர்கள் குளித்துள்ளனர். அதில் மூவர் வெளியேறிய நிலையில் சுதர்ஸன், அமீர்கான், மனோகரன் ஆகிய மூவரும் நீரில் மூழ்கிவிட்டது தெரிய வந்தது. தகவலறிந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் பாறைக்குழி நீரில் நீண்ட நேரம் தேடி 3 மாணவர்களின் உடல்களை மீட்டனர். இறந்த மாணவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai