Enable Javscript for better performance
பொது நூலக இயக்ககத்துக்கு நூல்களை பரிசீலனைக்கு அனுப்பலாம்- Dinamani

சுடச்சுட

    

    பொது நூலக இயக்ககத்துக்கு நூல்களை பரிசீலனைக்கு அனுப்பலாம்

    By சென்னை,  |   Published on : 24th March 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசு பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கு 2016, 2017-ஆம் ஆண்டுகளில் பதிப்பான தமிழ், ஆங்கில நூல்கள் வாங்க பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் பரிசீலனைக்காக வரவேற்கப்படுகின்றன.
    இது தொடர்பாக பொது நூலகத் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பரிசீலனைக்குப் பெறப்படும் எல்லா நூல்களும் வாங்குவதற்கில்லை; அரசின் சார்பில் அமைக்கப்பட்ட நூல் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் மட்டுமே வாங்கப்படும். கடந்த 2016, 2017-ஆம் ஆண்டுகளில் பதிப்பான நூல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பிற ஆண்டு நூல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,
    மாதிரி நூல்களை ஏ, பி. சி. (குறுந்தகட்டுடன்) படிவங்களுடன் ஏப்.19-ஆம் தேதிக்குள் ""பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணாசாலை, சென்னை- 600002'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நூல் பதிவு கட்டண விவரம், நூல்கள் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள், நிபந்தனைகள் www.tnpubliclibraries.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என பொது நூலக இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai