Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் ஹெலிகாப்டர் திருவிழா! மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெறுகிறது- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் ஹெலிகாப்டர் திருவிழா! மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெறுகிறது

    By  பொள்ளாச்சி,  |   Published on : 24th March 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் குறைந்த வாடகையில் ஹெலிகாப்டர் திருவிழா மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
     ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாத இறுதியில் ஹெலிகாப்டர் திருவிழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, முதல்முறையாக மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக, பொள்ளாச்சியை அடுத்த நா.மூ.சுங்கம், ராமு கலை, அறிவியல் கல்லூரியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டு வருகிறது.
     விமானத்தில்கூட குறைந்த கட்டணத்தில் பயணிக்கக் கூடிய நிலையில், ஹெலிகாப்டர் சவாரி என்பது லட்சங்கள் செலவு செய்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உள்ளது.
     தமிழகத்தில், பெரும் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக ஹெலிகாப்டர் பயணம் இருந்து வருகிறது. இந்தக் குறையைப் போக்கும் வகையிலும், நடுத்தர, ஏழை மக்களும் ஹெலிகாப்டர் சவாரி செய்யும் வகையிலும் ஹெலிகாப்டர் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10 நிமிடங்கள் - சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு ஹெலிகாப்டரில் சவாரி செய்ய ஒரு நபருக்கு ரூ. 4,199, 20 நிமிடங்கள் - சுமார் 30 கி.மீ. செல்ல ரூ. 7,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமு கலைக் கல்லூரியில் இருந்து கிளம்பினால் ஆழியாறு அணை மற்றும் அதை ஒட்டிய வனப் பகுதிகளை 20 நிமிடத்துக்குள் ஹெலிகாப்டர் மூலமாகப் பார்த்துவிட முடியும் என்பதால், இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.
     இதில், 6 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கைகள் உள்ளன. பெல் 407 வகை ஹெலிகாப்டர் இதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது. ஸ்பிளை ஏவியேஷன் எனும் அமைப்பு இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது. 96009 77711, 77080 27770 என்ற செல்லிடப்பேசி எண்களில் இதுகுறித்து கேட்டுக்கொள்ளலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai