Enable Javscript for better performance
மருத்துவர் என குறிப்பிடும் பிசியோதெரப்பிஸ்ட் மீது நடவடிக்கை: காவல்துறைக்கு  நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவர் என குறிப்பிடும் பிசியோதெரப்பிஸ்ட் மீது நடவடிக்கை: காவல்துறைக்கு  நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 24th March 2018 02:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    high_court1


    சென்னை: மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட்டுகள் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    பிசியோதெரப்பிஸ்ட் படித்தவர்கள் தங்களை மருத்துவர்கள் என்று கூறி சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த மனு மீது காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இது தொடர்பான வழக்கு விசாரணையில், பிசியோதெரப்பிஸ்ட்டுகள் தங்களை மருத்துவர் என குறிப்பிட தடை விதித்து 2008ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், மருத்துவர்கள் என்று கூறிக் கொள்ளும் பிசியோதெரப்பிஸ்டுகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வாதங்களை கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம், மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட்டுகள் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai