Enable Javscript for better performance
மாணவர்களிடம் கடனை வசூலிக்க கெடுபிடி கூடாது- Dinamani

சுடச்சுட

    
    VasanGK

    விவசாயிகள் மற்றும் மாணவர்களிடம் வங்கிக் கடனை வசூலிப்பதில் கெடுபிடிகள் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
     இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
     பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் சதவீதம் அதிகரித்துக்கொண்டே போகிறது. வங்கியில் கடன் பெற்ற முதலாளிகளிடம் வசூல் செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்காமல், விவசாயம் செய்வதற்காக பெற்ற பயிர்க்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கும் விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கெடுபிடி செய்து, வசூல் செய்யும் வங்கிகளின் செயலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
     விவசாயிகள், மாணவர்கள் போன்றோரிடம் கடனை வசூல் செய்ய கெடுபிடிகளில் ஈடுபடக்கூடாது என்பதை மத்திய அரசு வங்கிகளுக்கு உறுதிப்படத் தெரிவிக்க வேண்டும்.
     மேலும், நியாயமாக கடன் பெற வரும் விவசாயிகள், மாணவர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு காலம் தாழ்த்தாமல் வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai