Enable Javscript for better performance
"மார்ச் 30-இல் ம.நடராஜன் படத் திறப்பு விழா'- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த ம. நடராஜனின் படத் திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் மார்ச் 30 -ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
     இதுதொடர்பாக அவர், தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியது:
     தஞ்சாவூர் தமிழ் அரசி மண்டபத்தில் நடராஜன் பட திறப்பு நிகழ்ச்சி மார்ச் 30 -ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். அவருடன் யாரெல்லாம் நெருக்கமாக இருந்தனரோ, அவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகப் பேசி வருகிறோம். முக்கியத் தலைவர்கள் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.
     ஜெயலலிதா மறைவு தொடர்பாக நடத்தப்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நியாயமான முறையில் செயல்பட முடியுமா என்பது சந்தேகம்தான். சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்றார் தினகரன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai