Enable Javscript for better performance
முதுநிலை மருத்துவம்: விண்ணப்பம் பதிவிறக்க அவகாசம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    முதுநிலை மருத்துவம்: விண்ணப்பம் பதிவிறக்க அவகாசம் நீட்டிப்பு

    By சென்னை  |   Published on : 24th March 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு மாநில அரசின் ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு கலந்தாய்வு நடத்துவதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கின. 
    விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு கூடுதல் இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 26 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai