Enable Javscript for better performance
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலர் நீக்கம்: எதிர்த்து 146 நிர்வாகிகள் ராஜிநாமா- Dinamani

சுடச்சுட

    

    ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலர் நீக்கம்: எதிர்த்து 146 நிர்வாகிகள் ராஜிநாமா

    By  திண்டுக்கல்,  |   Published on : 24th March 2018 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajinikanth

    திண்டுக்கல் மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்டச் செயலர் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 146 நிர்வாகிகள் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அதில், தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களை இணைத்து, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்புகளையும் வழங்கியுள்ளார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டச் செயலராக தம்புராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திடீரென தம்புராஜ் நீக்கப்பட்டு, புதிய தலைவராக அரவிந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
     இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் 8 பேர், நகர மற்றும் மாநகர நிர்வாகிகள் 29 பேர், 11 வட்டாரங்களைச் சேர்ந்த 109 பேர் என மொத்தம் 146 பேர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலர்கள் குணசேகரன், தண்டபாணி, வெங்கடேசன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: ரஜினிகாந்துக்கு ஆலோசகர்களாக இருக்கும் சுதாகர், ராஜூ மகாலிங்கம், ராஜசேகர் ஆகியோரின் தவறான தகவலால் மாவட்டத் தலைவர் மாற்றப்பட்டிருக்கலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்றக் காவலர்களாக நியமிக்கப்பட்ட 146 பேர் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai