Enable Javscript for better performance
ஸ்டெர்லைட் புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை: கமல்ஹாசன்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டெர்லைட் புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை: கமல்ஹாசன்

    By DIN  |   Published on : 24th March 2018 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kamalhassan-6

    ஸ்டெர்லைட் புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்‍குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரரெட்டியார்புரம் கிராம மக்‍கள் கடந்த 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆலை விரிவாக்‍கத்தை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்‍கத்தினர் சார்பில் இன்று மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. 

    மேலும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்‍குடி நகர வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நகரின் பிரதான சாலைகளில் கடைகள் அடைக்‍கப்பட்டு அப்பகுதி வெறிச்சோடியது. திருவைகுண்டம், புதியம்புத்தூர் பகுதிகளிலும் கடைகள் அடைக்‍கப்பட்டன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்‍குடி மீனவர்கள் இன்று கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லவில்லை. போராட்டத்துக்கு ஆதரவாக உப்பளத் தொழிலாளர்களும் பணிக்‍குச் செல்லவில்லை. 

    இந்நிலையில் ஸ்டெர்லைட் புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,
    ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai