Enable Javscript for better performance
அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்

    By DIN  |   Published on : 31st March 2018 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ttv-dinakaran

    அதிமுக அறிவித்திருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
    தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தது:
    அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் நம்ப முடியாதது. அரசும், ஆட்சியும் அவர்களுடைய கையில் இருந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. 
    தீர்ப்பு வந்தவுடனேயே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும்போதே அழுத்தம் தந்திருக்க வேண்டும். 
    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அதன்படியே நடந்துவிட்டது. அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
    திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு வந்தால் பார்த்துக் கொள்ளலாம். தமிழக நலனை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து 
    போராடினாலும், கூட்டம் நடத்தினாலும் அதில் நான் கலந்து கொள்வேன். 
    சசிகலா பரோல் முடிந்து சனிக்கிழமை (மார்ச் 31) பெங்களூருவுக்கு செல்கிறார் என்றார் தினகரன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai