Enable Javscript for better performance
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த ஆசிரியையின் கணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த ஆசிரியையின் கணவர் சாவு

    By DIN  |   Published on : 31st March 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த பள்ளி ஆசிரியையின் கணவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.
    மதுரை விளாங்குடி தினமணி நகரைச் சேர்ந்தவர் ஜேசுராஜா (45). இவரது மனைவி லியோ ஜெஸிந்தா. இவர் மதுரை காமராஜர் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
    இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த ஜேசுராஜா, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைத்து ஜேசுராஜாவை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜேசுராஜா வைத்திருந்த கடிதத்தில் தனது மனைவி லியோ ஜெஸிந்தா 12 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு பின்பு பணியில் சேர்ந்த பலரை பள்ளி நிர்வாகம் பணி நிரந்தரம் செய்துள்ளதாகவும், லியோ ஜெஸிந்தாவை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றும் இதனால் குடும்பம் நடத்த சிரமம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
    இந்நிலையில் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஜேசுராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai