Enable Javscript for better performance
ஆளுநருடன் திருநாவுக்கரசர் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார்.
    கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஆளுநரை சந்தித்து சுமார் 20 நிமிஷங்களுக்கு மேலாக திருநாவுக்கரசர் பேசினார்.
    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து ஆளுநரிடம் விளக்கினேன். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு கோரினேன். கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் முறைகேடு நடைபெறுகிறது என்றும், நேர்மையாகத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். காவிரி விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.1) , திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்போம் என்றார் திருநாவுக்கரசர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai