Enable Javscript for better performance
'கற்பகம்' படத்துக்கான நெகட்டிவ் உரிமை விஎம் நிறுவனத்துக்கே சொந்தம்: உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    'கற்பகம்' படத்துக்கான நெகட்டிவ் உரிமை விஎம் நிறுவனத்துக்கே சொந்தம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 31st March 2018 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    'கற்பகம்' திரைப்படத்துக்கான நெகட்டிவ் உரிமை ஏவிஎம் நிறுவனத்துக்கே சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஜெமினி கணேசன், சாவித்திரி, கே.ஆர்.விஜயா நடித்த ' கற்பகம் ' திரைப்படம் கடந்த 1963 நவம்பர் 15 -இல் வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தை அமர்ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். இயக்குநரின் சகோதரர் சபரிநாதன் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆவார். 
    இந்த நிலையில், நெகடிவ் உரிமைக்கான காலம் முடிவடைந்துவிட்டதாக சபரிநாதன், ஏவிஎம் நிறுவனத்துக்கு கடந்த 2013 -இல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, கற்பகம் படத்தின் உரிமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஏவிஎம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
    இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
    அப்போது, ஏவிஎம் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடும்போது, 'ஏவிஎம் நிறுவனத்திடமிருத்து கடந்த 1963 மே 1 -ஆம் தேதி சபரிநாதன் ரூ.4 லட்சம் கடன் வாங்கினார். அதற்காக 1963 அக்டோபர் 4 -ஆம் தேதி ஒரு ஒப்பந்தத்தை ஏவிஎம் நிறுவனத்துடன் அவர் செய்துக் கொண்டார். அதில் 49 ஆண்டுகளுக்கு படத்தின் விநியோக உரிமையை ஏவிஎம் நிறுவனத்துக்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    பின்னர் 1964 ஆகஸ்ட் 14 -இல் ஏவிஎம் நிறுவனத்திற்கு படத்துக்கான (உலகம் முழுவதும்) நெகட்டிவ் உரிமை 99 ஆண்டுகளுக்கு வழங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
    எனவே, படத்தின் உரிமை அனைத்தும் ஏவிஎம் நிறுவனத்துக்கே சொந்தமானது' என வாதிட்டார்.
    வழக்கை விசாரித்த நீதிபதி, 'இந்த படத்துக்கான நெகட்டிவ் உரிமை ஏவிஎம் நிறுவனத்துக்கு 2062 -ஆம் ஆண்டுவரை உள்ளது என்பதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 
    எனவே, இந்தப் படத்துக்கு ஏவிஎம் நிறுவனம்தான் சொந்தம் கொண்டாட முடியும். எனவே, இந்த வழக்கில் மனுதாரர் நிறுவனத்தின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன' என உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai