Enable Javscript for better performance
காற்றழுத்த தாழ்வு நிலை: ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    காற்றழுத்த தாழ்வு நிலை: ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு மத்திய மகாராஷ்டிராவில் இருந்து குமரிக்கடல் வரை உள்தமிழகம் வழியாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைப் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: 
    தெற்கு மத்திய மகாராஷ்டிராவில் இருந்து குமரிக்கடல் வரை உள்தமிழகம் வழியாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நீடித்து வருகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யும். சென்னையில் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.
    வெப்பநிலை உயர்வு: தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டியது. இதன் காரணமாக, கரூர், திருச்சி விமான நிலையம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 102 டிகிரி வெப்பநிலை பதிவானது. 
    சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 98 டிகிரி வெப்பநிலை பதிவானது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai