Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம்: பதவியைத் தியாகம் செய்ய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம்: பதவியைத் தியாகம் செய்ய வேண்டும்

    By DIN  |   Published on : 31st March 2018 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kamal

    காவிரி விவகாரத்துக்காக தமிழக எம்.எல்.ஏ.-க்கள் பதவியைத் தியாகம் செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
    சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக எம்.எல்.ஏ.-க்கள் பதவியைத் தியாகம் செய்ய முன்வர வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். உண்ணாவிரதம் உள்பட எந்த வகையில் அழுத்தம் கொடுத்தாலும், அது நியாயமானதாகவே இருக்க வேண்டும். திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் தேதியில் நான் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். எங்கள் கட்சியிலிருந்து வேறு யாராவது பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai