Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் : சிவகங்கையில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் : சிவகங்கையில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tower

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இரு குழுக்களாகப் பிரிந்து, இரண்டு செல்லிடப்பேசி கோபுரங்களில் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், தமிழக அரசியல் வட்டாரங்களிலும், விவசாயிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
    இந்நிலையில், சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள 2 செல்லிடப்பேசி கோபுரங்களில் ஒன்றில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் பாலா, செயலர் காளீஸ்வரன் ஆகியோர் தலைமையில் 9 பேரும், மற்றொரு செல்லிடப்பேசி கோபுரத்தில் அக்கட்சியினர் 4 பேரும் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு மற்றும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீஸார், தீயணைப்புத் துறையின் சிவகங்கை நிலைய அலுவலர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், சிவகங்கை வட்டாட்சியர் கந்தசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

     


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai