Enable Javscript for better performance
டெல்டா மாவட்டங்களில் ஏப்.5 -இல் ரயில் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, டெல்டா மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.5) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சண்முகம் தெரிவித்தார். 
    இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
    காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை. தற்போது, உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். கடந்த பிப்ரவரி 21 -ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக, அதிமுக தன்னிச்சையாக ஏப்ரல் 2 -ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டங்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
    ஏப்ரல் 1 -இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டியிருப்பது வரவேற்புக்குரியது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி ஏப்ரல் 5 -ஆம் தேதி, டெல்டா மாவட்டங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 50 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.
    தமிழக அரசு, மத்திய அரசிடம் மென்மையானப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மத்திய அரசின் செயல் திட்டங்கள் ஸ்தம்பிக்கும் வகையில், தமிழக அரசின் செயல்பாடு இருக்க வேண்டும். பிரதமர் மோடி சென்னை வரும்போது விவசாயிகள் ஒன்று சேர்ந்து கருப்புக் கொடி காண்பிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதேபோல், தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கும் கருப்புக் கொடி காண்பித்து எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்றார் சண்முகம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai