Enable Javscript for better performance
நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம்: மதுரையில் இன்று தொடங்குகிறார் வைகோ- Dinamani

சுடச்சுட

    

    நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம்: மதுரையில் இன்று தொடங்குகிறார் வைகோ

    By DIN  |   Published on : 31st March 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko

    மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம் மதுரையில் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்த நடைபயணத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அங்கு ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகளை தொடங்கிய நிலையில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அபாயம் இருப்பதாக கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை தொடர்ந்து நடந்த போராட்டங்களால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை தமிழகத்தில் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு வைகோ தலைமையில் தொடங்கவுள்ள இந்த நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 
    இதில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ், மே 18 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்பட பலர் வாழ்த்திப் பேசுகின்றனர். மதுரையில் சனிக்கிழமை தொடங்கும் விழிப்புணர்வு நடைபயணம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்று கம்பத்தில் முடிவடைகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai