சென்னை விமான நிலையத்தில் விமான பணிப்பெண்களுக்கு நேர்ந்த அவமானம்: சர்ச்சையில் ஸ்பைஸ்ஜெட்! (விடியோ)

சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமான பணிப்பெண்களிடம், ஆடைகளை நீக்கி சோதனை நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டினால், அந்நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமான பணிப்பெண்களுக்கு நேர்ந்த அவமானம்: சர்ச்சையில் ஸ்பைஸ்ஜெட்! (விடியோ)

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமான பணிப்பெண்களிடம், ஆடைகளை நீக்கி சோதனை நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டினால், அந்நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 28 ஆம் தேதி இரவு பணி முடிந்து திரும்பிய ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமான பணிப்பெண்களிடம், ஆடைகளை நீக்கி அந்நிறுவன பாதுகாப்பு ஊழியர்களால் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. விமானத்தில் உணவு பொருள்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தினை மறைந்து எடுத்துச்செல்வதாகக் கூறி  இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பணிப்பெண்கள் குற்றம் சாட்டினார்.  

இது தொடர்பாக அந்நிறுவன விமான பணிப்பெண்கள் பேசும் விடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:

கடந்த 28-ஆம் தேதி இரவு குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டது உண்மைதான். இது வழக்கமாக பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். ஆனால் ஆடைகளை நீக்கி சோதனை என்பது உண்மையல்ல.

நிறுவனத்தின் பொருட்கள் அல்லது பணத்தினை ஊழியர்கள் எடுத்துச் செல்லக் கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதே இத்தகைய சோதனைகளின் அடிப்படை நோக்கம்.  பயணிகள், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதும், அவர்களின் பாதுகாப்பும் பிரதானம். மற்ற விமான நிலையங்களில் பயணிகள் எவ்வாறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்களோ அதுபோலத்தான் இதுவும்.

இந்த சோதனைகள் அனைத்தும் மூடிய அறைகளுக்குள் போதிய பயிற்சி பெற்ற ஊழியர்களால் நடத்தப்பட்டது.ஆண் பெண் பணியாளர்களுக்கு, தனித்தனி ஊழியர்களால் நடத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனையில் சில தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com