Enable Javscript for better performance
உதகை கோடை விழா: 122 ஆவது மலர்க் காட்சியை தொடங்கிவைத்தார் முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    உதகை கோடை விழா: 122 ஆவது மலர்க் காட்சியை தொடங்கிவைத்தார் முதல்வர்

    By DIN  |   Published on : 18th May 2018 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    flower_show1

    உதகை கோடை சீசனின் முக்கிய நிகழ்வான உதகை மலர்க் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    கோடைக் காலத்தில் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி,  கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி,  உதகையில்  ரோஜா காட்சி மற்றும் மலர்க் காட்சி, குன்னூரில் பழக் காட்சி ஆகியவை தோட்டக்கலைத் துறையின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கோடைக்கால சீசனையொட்டி கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியும்,  கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சியும்,  உதகையில் ரோஜா காட்சியும் முடிவடைந்துள்ளன. கோடை சீசனின் முக்கிய நிகழ்வான உதகை மலர்க் காட்சி இன்று தொடங்கி 22ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில் மலர்க் காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து ரூ.1,850 கோடி மதிப்பீட்டினாலான குந்தா நீரேற்றுப் புனல் மின் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai