Enable Javscript for better performance
எடியூரப்பா பதவியேற்றது ஜனநாயக விரோதம்: தலைவர்கள் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    எடியூரப்பா பதவியேற்றது ஜனநாயக விரோதம்: தலைவர்கள் கருத்து

    By DIN  |   Published on : 18th May 2018 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin

    கர்நாடகத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள அணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் முதல்வராக பாஜகவின் எடியூரப்பாவைப் பதவியேற்கச் செய்தது ஜனநாயக விரோதம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர்.
    மு.க.ஸ்டாலின் (திமுக): கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைந்துள்ள காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் - பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்எல்ஏக்கள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைத்தது தன்னிச்சையானது, அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்.
    சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆளுநர் மூலம் பாஜக ஆட்சி எடியூரப்பா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூர், மேகாலயா, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோது ஆட்சிப் பொறுப்பேற்க அழைப்பு விடுக்காமல் ஜனநாயகத்தை படுகொலை செய்த பாஜக இப்போது கர்நாடகத்தில் பாஜகவைப் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க அழைத்திருப்பது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால்.
    தொல்.திருமாவளவன் (விசிக): கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருந்தாலும்கூட, அவர்களை ஆட்சி அமைக்க அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தது என்பது ஒரு ஜனநாயகப் படுகொலையாகும். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. எந்த அணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமோ அவர்களை அழைப்பதுதான் சட்ட வழிமுறை. 
    ஜவாஹிருல்லா (மமக): அரசியலமைப்பு சட்டத்தை சிறுமைப்படுத்தி கர்நாடக முதல்வராக எடியூரப்பா முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட தினம் கறுப்பு தினம். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜகவிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.
    தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): அசியலமைப்புச் சட்டப்படி மக்களாட்சி நடத்தவிடாமல், எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்கச் செய்தது ஜனநாயகப் படுகொலை. 
    கி.வீரமணி (திராவிடர் கழகம்): பெரும்பான்மை எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு காங்கிரஸுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இருப்பதைத் தெரிந்தும் பாஜகவை ஆட்சிப் பொறுப்பேற்க வைத்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai