Enable Javscript for better performance
காவிரி அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்துடன் மேலாண்மை ஆணையம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்துடன் மேலாண்மை ஆணையம்

    By DIN  |   Published on : 18th May 2018 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anbumani

    மத்திய அரசு புதிதாக பெயரிட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன்கூடியதாக இருக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு அதன் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு காரணமாக, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே கர்நாடக அணைகள் இருக்கும்படி வரைவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
    காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன்தான் காவிரிமேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு குறைவான எந்தவொரு அமைப்பையும் தமிழக அரசு ஏற்கக் கூடாது. உச்ச நீதிமன்றமும் அதை அனுமதிக்கக்கூடாது. என அன்புமணி தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai