Enable Javscript for better performance
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை; மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை; மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 18th May 2018 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court


    புது தில்லி: குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

    குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கக் கோரியும், குட்கா உள்ளிட்ட பொருள்களை சட்டவிரோதமாக குட்கா விற்பனைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் அனுமதித்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏப்ரல் 26-ல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த உத்தரவு எதிராக தமிழக சுகாதாரத் துறை அதிகாரி இ. சிவக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த திங்கள்கிழமை (மே 14) நடைபெற்றது. அப்போது, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்தது. அதில், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று கூறி, சிவக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai