Enable Javscript for better performance
கைத்தறி நெசவு: அரசின் புதிய விதிக்கு வாசன் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சந்தை ஊக்குவிப்பு நிதியைப் பெறுவதற்கான மத்திய அரசின் புதிய விதிக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 1,136 கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 3.30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.380 கோடி ரிபேட் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மத்திய அரசு சந்தை ஊக்குவிப்பு நிதியாக ரூ.88 கோடி வழங்க வேண்டிய நிலையில், 'ரூ.30 லட்சம் அளவுக்கு விற்பனை செய்துள்ள சங்கங்களுக்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்படும்' என்ற புதிய விதியை உருவாக்கியுள்ளது. இதனால் கைத்தறி நெசவுத் தொழில் மேலும் நசிந்து போகக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே, சந்தை ஊக்குவிப்பு நிதி தொடர்பான புதிய விதிகளைத் தளர்த்தி, அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அதனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai