Enable Javscript for better performance
'சாகர்' புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஏடன் வளைகுடா பகுதியில் 'சாகர்' என்ற புயல் உருவாகியுள்ளதால் தென்மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    இது குறித்து அந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் ஏமன் நோக்கிச் செல்லக்கூடும் என்பதால் மீனவர்கள் தென் மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு அடுத்த இரு நாள்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனினும் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 104 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் இருக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai